புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 செலுத்தும் போது அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியதும், 4ஜி வேகம் குறைக்கப்படும். மற்ற திட்டங்களில் தினசரி டேட்டா பயன்பாடு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.யாக குறைக்கப்படும். ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டத்தின் ஒரே நன்மை கூடுதல் டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எவ்வித ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும். எனினும் நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும்.
ஜியோ வழங்கும் ரூ.96 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., 1 ஜிபி இண்டர்நெட் தினமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஏழு நாட்கள் ஆகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் குறைந்து விடும்.