மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.
மிதுனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகபேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டம் நிறைவேறும் நாள்.
சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.
துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது முடியும் நாள்.
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதிக்கும்-. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.