மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பெறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
துலாம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
மகரம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மீனம்: எதையும் தாங்கும் மனவலிமைகிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.