Wednesday , October 15 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 23.12.2018

இன்றைய ராசிபலன் 23.12.2018

மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்பக்கபலமாக இருப்பார்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். பாதியில் நின்றவேலைகள் முடிவடையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங் கும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். நீங்களும் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லி விடுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க  வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பழைய பிரச் னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்கநினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள்.  உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.

கன்னி: எத்தனை பிரச்னை கள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு  வட்டம் விரியும்.நேர்மறை எண்ணங்கள்பிறக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பு களை சரி  செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலர் உங்களைவிமர்சிப்பார்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.  உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு: உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபா ரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவி யைநாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை  கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணங் கள் சிறப்பாக அமையும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள்  கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப் பாவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுக்  கிட்டும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …