மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி மதிப்பார். நிம்மதி கிட்டும் நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்க ளால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
மிதுனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோ தர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
கன்னி: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத் தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தடைகள் நீங்கும் நாள்.
தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
மகரம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.