Thursday , November 21 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 19.06.2019

இன்றைய ராசிபலன் 19.06.2019

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல்இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்கவேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்: உற்சாகமாக எதையும்   முன்னின்று  செய்வீர்கள்.விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப் பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அமோகமான நாள்.

சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம்குறித்து யோசிப்பீர்கள். சிக் கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங் குவீர்கள். நட்பால் ஆதாயம்  உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி:  முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத் தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்துவாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைசொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழையசிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைப்படும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைச்சுற்றல், முழங்கால்வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: கணவன்-மனை விக்குள் வீண் விவாதம் வந்துச்செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். எதிலும் கவனம் தேவைப் படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …