Saturday , June 28 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 10.07.2019

இன்றைய ராசிபலன் 10.07.2019

மேஷம்: உங்களுடைய அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்து காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார்.

துலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். வியாபாரத் தில் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும்.

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும்.

கும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

மீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

 

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …