Monday , August 25 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 06.02.2019

இன்றைய ராசிபலன் 06.02.2019

மேஷம்: தவறு செய்பவர்  களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், குழப்பம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

சிம்மம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண் பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்புலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டகாரியம் துலங்கும் நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. புது பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: பேச்சில் முதிர்ச்சி தெரியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு  நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.பணவரவு திருப்தி தரும்புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். போராடி வெல்லும் நாள்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …