Friday , November 22 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 04.03.2018

இன்றைய ராசிபலன் 04.03.2018

மேஷம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை
யாளர்களாவார்கள். இனிமையான நாள்.

தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும்-. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …