Monday , November 18 2024
Home / ஆன்மிகம் / நோய் வருவதற்கான காரணங்களாக சித்தர்கள் கூறுவது…!

நோய் வருவதற்கான காரணங்களாக சித்தர்கள் கூறுவது…!

சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கபோகும், நிகழ்ச்சிகளை கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டவர்கள்.

ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

நீரிழிவு நோய் தாக்கி அழிவதை விட வருமுன் காப்பதே அறிவுடமையாகும். சில வழிமுறைகள் கூறப்படுகின்றன. அதிலும் அளவு வேண்டும்.

சிறுநீர்ப்பிரிதி, கல்லீரல் குடும்படியான மிகுபுணர்ச்சி, உழைப்பின்றி கிக உனவு, புலால், கொழுப்பு, இனிப்பு மிக்க உணவு, காபி, டீ அடிக்கடி குடிப்பது அதிக மன உளச்சல், மூலச்சூடுண்டாக்கும். மலச்சிக்கலை தவிர்க்கவும்.

அதிக மூளை உழைப்பை குறைக்கவும். கவலையை அறவே விடவேண்டும். செயற்கை மோகத்தை விட்டு இயற்கையில் ஈடுபாடு கொல்ள வேண்டும். கிழமை தோறும் தவறாது ஒரு முறை முருங்கைக் கீரை, பாகற்காய் ஒரு முறை, அகத்திக் கீரை, சுண்டைக்காய் சேர்த்து வந்தால் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் வராது. நீ ஆரைக் கீரை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் அறவே நீங்கும்.

நீரிழிவுக்காரர்கள் சிலவற்றை தவிர்த்தல் வேண்டும். சர்க்கரை, மாவு, கொழுப்பு, உணவுகளைத் தவிர்க்கவும். வெல்லம், கற்கண்டு, மிட்டாய், மைதா, வடை, கிழங்கு, அரிசி ஆகியவற்றையும் தவிர்க்கவும். அடிக்கடி காபி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு 40 வயதிற்கு மேல் உறுதியாக நீரிழிவு வரும். ஆகவே நீக்கவேண்டும்.

Check Also

கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!

திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து …