அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் னைவரின் கோபத்தை சம்பாதித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்தார். இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை …
Read More »வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்
வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு …
Read More »வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம்?
வடகொரிய அதிபர் கிம் சீனாவிற்கு சென்றுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள ரகசியங்களும் வெளியே வரும். வடகொரியாவின் அதிபர் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து வடகொரிய தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கிம்மின் …
Read More »அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள தென்கொரியா செல்லும் வடகொரியா உயர் மட்ட குழு அங்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது. நீண்ட கால பகையை கடந்து தென் கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தென்கொரியா சென்றது குறிப்பிடத்தக்கது. வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் …
Read More »டிரம்ப் தற்பெருமைக்கு பதிலடி கொடுத்த வடகொரியா!
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என அமெரிக்கா விமர்சனம் செய்ததற்கு வடகொரியா பதிலளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை …
Read More »வடகொரியாவில் நடப்பது என்ன?
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை …
Read More »பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் …
Read More »வாங்க பழகலாம்….
50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் வட கொரியா மற்றும் தென் கொரியாவை பிரித்து வைத்துள்ளது. தற்போது அந்த இடைவெளி அமெரிக்காவால் மேலும் அதிகரித்தது. தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அமைதி கிராமம் என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் …
Read More »கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. வடகொரியா வெளியுறவு அமைச்சக அதிகாரி பேசியதை சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு …
Read More »ஒரே கொடியின் கீழ் இரண்டு பகை நாடுகள்!
இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டில் கலந்துகொள்ளவும் அமைதி கிரமமான …
Read More »