எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன் எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் …
Read More »கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு
கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாகஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்றைய கல்கிஸை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட கீத் நோயார் தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எனினும், …
Read More »நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்
நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். …
Read More »கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் …
Read More »சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை …
Read More »பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ
பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இதுவரை …
Read More »ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. …
Read More »பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல் அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் …
Read More »எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி …
Read More »ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …
Read More »