ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நேரத்தின் படி நேற்றைய தினம் மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ் தமிழ் …
Read More »மீள வழங்க முடியாத காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: டிலான்
மீள வழங்க முடியாத காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: டிலான் பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், …
Read More »ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்?
ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை மிகக் காட்டமானதாகவும், எச்சரிக்கை மிகுந்ததாகவும் அமையும் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அமர்வின் முதல் நாளில் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் …
Read More »ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முட்டாளாக்க முடியாது : உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார …
Read More »போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், …
Read More »மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி
மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 …
Read More »பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம்
பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம் கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளது. பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி …
Read More »மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது
மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது …
Read More »எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால்
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார். அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, …
Read More »காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக …
Read More »