காவிரி விவகாரத்திற்காக மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக வந்த தகவலின் பேரில், சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய …
Read More »சென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்
காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் …
Read More »காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. நைல் …
Read More »சத்யராஜிற்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழிசை
திரைத்துறையினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், ராணுவமே வந்தாலும் அசர மாட்டோம் என கூறியதற்கு, தமிழைசை சௌந்தர்ராஜன், சத்யராஜை மிரட்டும் வகையில் பதிலளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, …
Read More »நடிகர் சங்க போராட்டத்தில் உடன்பாடு இல்லை
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இன்று காலை அரவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை. காலை 9 மணி அளவில் துவங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிம்பு பேசியது பின்வருமாறு… மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய …
Read More »ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுங்கள்
உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் தமிழகத்தில் காவிரிக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் …
Read More »காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. அதேபோல் தூத்துக்குடியில் …
Read More »லண்டனில் காவிரிக்காக போராடும் தமிழர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து லண்டனில் வரும் 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் …
Read More »காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்? இது புது டிவிஸ்ட்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் …
Read More »ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் …
Read More »