மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது …
Read More »தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்
தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது …
Read More »இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்
இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய …
Read More »அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு !
அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு ! பலத்த அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் பேரவையில் அமைதி காத்தனர். சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் …
Read More »நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் …
Read More »சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன்
சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கயைானது ஐ.நா தீர்மானத்தின் தேசிய கூறுகளை நோக்கி முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச …
Read More »காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக …
Read More »இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா
இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா தெரிவித்தார். 18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். …
Read More »கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை வீதியில் நிர்க்கதியாக்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என கோரி கடந்த மாதம் …
Read More »பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலி – 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலி – 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் பாகிஸ்தான் உள்ள ஒரு தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது. கடந்த புதன்கிழமை …
Read More »