Tuesday , August 26 2025
Home / Tag Archives: 20ஆவது திருத்தச் சட்டமூலம்

Tag Archives: 20ஆவது திருத்தச் சட்டமூலம்

’20’ இற்கு எதிராக சிவில் அமைப்புகள் போர்க்கொடி!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார். தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் …

Read More »

’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை

மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவருவதால் அதில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசு அவசரமாக தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் அனுமதியையும் அரசு கோரியுள்ளது. இதன்படி …

Read More »

’20’ ஐ நிறைவேற்றுவதில் இழுபறி! முதலமைச்சர்களுடன் மைத்திரி அவசர சந்திப்பு!!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான ஆதரவை வழங்கும் விடயத்தில் மாகாண சபைகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் அவசரமானதும், முக்கியத்துவமானதுமான சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான …

Read More »

கிழக்கில் இன்று ’20’ நிறைவேறும்? 

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என்பது குறித்து கிழக்கு மாகாண சபையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குறித்த சட்டத்திருத்தத்துக்கு வடமத்திய மாகாண சபை ஆதரவையும், ஊவா மாகாண சபை எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தன. நேற்று மேல்மாகாண சபையில் நடைபெற்ற அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபையில் இன்று இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. …

Read More »