கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த அகழ்வு பணிகள் இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் விடுதலைப்புலிகளால் …
Read More »உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது …
Read More »