Sunday , August 24 2025
Home / Tag Archives: வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Tag Archives: வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

Read More »

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு அமைக்கப்படவேண்டும்! – விக்கி யோசனை

20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண …

Read More »

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா. கண்டுகொள்வதில்லை: சி.வி. விசனம்

“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. …

Read More »

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர்

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுவதோடு, இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.       …

Read More »