ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் – என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையானது தேர்தல் நாடகமாகும். பிணை முறி விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் ரணில் விக்கிரமசிங்கவென …
Read More »சந்திரிக்கா மீது கடுமையாக குற்றம்சாட்டிய ரவி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க , சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் அழிப்பதற்கு முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கள மொழி வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய …
Read More »