இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார். அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், …
Read More »யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த …
Read More »நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சபூர்தின்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சனிக்கிழமை மாலை நல்லூரில் நீதவான் இளஞ்செழியனை …
Read More »இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமைக்கு விக்கி கடும் கண்டனம்! – உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு ஆழ்ந்த இரங்கல்
“யாழ்.நல்லூர் பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் …
Read More »