ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நடைபெற்றுள்ள நிலையில் அதிருப்தி நிலையில் இருக்கும் சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசிலிருந்து வெளியேறும் தமது முடிவை அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வெளியிடவுள்ளனர் என்றும், அதன் பிறகு கூட்டரசிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்றும் அறியமுடிகின்றது. தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என மைத்திரியுடன் உள்ள 17 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக …
Read More »மைத்திரி – ரணில் அவசர சந்திப்பு! – ஊவா, தென் மாகாண சபைகளுக்கு ’20’ திருத்தத்துடன் மீண்டும் அனுப்பிவைப்பு
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மீண்டும் குறித்த திருத்தச் சட்டமூலத்தை சில திருத்தங்களுடன் அனுப்புவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பின் பின்னரே மேற்கண்டவாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கு …
Read More »புதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்
“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து …
Read More »அஸ்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மைத்திரி!
மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ.எச்.எம். அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினார். தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அஸ்வரின் வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு7.15 மணியளவில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அஸ்வர் காலமானார். …
Read More »’20’ ஐ நிறைவேற்றுவதில் இழுபறி! முதலமைச்சர்களுடன் மைத்திரி அவசர சந்திப்பு!!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான ஆதரவை வழங்கும் விடயத்தில் மாகாண சபைகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் அவசரமானதும், முக்கியத்துவமானதுமான சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான …
Read More »ஜனாதிபதி மைத்திரியின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?
சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சின் கீழேயே இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்து வருகிறது. விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சரியாகச் செயற்படவில்லை என்று அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் …
Read More »காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்ப
“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய …
Read More »தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
Read More »அரசுக்குள் கறுப்பு ஆடுகள்! மைத்திரியிடம் அறிக்கை!! – பொது எதிரணியிலிருந்தும் குத்துக்கரணம்
தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் …
Read More »ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கூட்டமைப்பு …
Read More »