முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட மாவீரர்களின் உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்துக் கல்லறைகளைக் கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள் அதனைக் கட்டியணைத்துக் …
Read More »