வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். …
Read More »