தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் …
Read More »