தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது …
Read More »மஹிந்தவுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்பதவிகளை வகிப்பதற்கு அதிகாரமில்லையென ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை ஆகியவற்றுக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக …
Read More »