கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரேஸ்நாத் இரத்தினபாலன் (வயது –-48) தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக கடந்த வியாழக் கிழமை மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார். குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் …
Read More »