ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நளை பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள சுற்றுலாத்துறை விருது வழங்கும் விழாவை சிலர் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறை சார் தலைவர்கள் சிலரே இவ் விழாவை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து குறித்த விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More »ஜனாதிபதியின் உளவியல் மீது பாரிய சந்தேகம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின் காரணமாக அவரது நன்மதிப்பு குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் …
Read More »அரசியல் நெருக்கடிக்கு தீர்வு பெறும் முக்கிய இரு கலந்துரையாடல்கள் இன்று
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற …
Read More »மனம் வருந்தும் ரணில்
என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல. ஜனாதிபதி தனது சட்டவிரோதமான நடவடிக்கையினால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் தன்னால் பணியாற்ற முடியாதிருந்ததாகவும் அவரின் பொருளாதாரக் கொள்கைகள் நிலைமைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற கூட்டத்தில தெரிவித்திருந்தமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் …
Read More »மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் …
Read More »டிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், …
Read More »வவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனாதிபதி! – நன்றி தெரிவித்தார் தாய் (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். …
Read More »ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில …
Read More »வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று …
Read More »ரவிக்கு ஜனாதிபதி – பிரதமர் அழுத்தம்?
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் …
Read More »