இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சுகாதார அமைச்சு இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குழு பரிசோதனை முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் பிரதானியான பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினை பரிசோதிக்கும் PCR …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு! இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 142 ஆக உயர்வடைந்துள்ளது. …
Read More »சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 122 பேர் பாதிக்கப்படிருந்த நிலையில் சற்று முன்னர் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …
Read More »இயற்கை அனர்த்தத்தால் தொற்றுநோய் அபாயம்!
நாட்டின் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தையடுத்து, நீரால் பரவும் நோய்கள் தலைதூக்கும் சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளின் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாந்திபேதி, வயிற்றுளைவு மற்றும் சரும வியாதிகள் துரிதமாகப் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட …
Read More »