சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை …
Read More »சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Tramadol என்ற வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் 37 மில்லியன் மாத்திரைகள் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால், லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறிலங்காவில் இருந்தே இந்த மருந்துக் கொள்கலன்கள், கப்பல் மூலம் லிபியாவுக்கு அனுப்பப்பட்டது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தேவைக்காகவே இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தாலியின் ஜினோவா …
Read More »சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று, சிறிலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து …
Read More »சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி
சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்ரேலியா உதவும் …
Read More »