Monday , August 25 2025
Home / Tag Archives: சிறிலங்கா (page 2)

Tag Archives: சிறிலங்கா

கொத்தணிக் குண்டுகளை தடைசெய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது இலங்கை

கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையிடம் முன்வைத்திருந்தார். இதற்கமைய, கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில், கையெழுத்திட்ட 102 நாடுகளுடன் சிறிலங்காவும் இணைந்து கொள்ளவுள்ளது. அதேவேளை, போரின் போது சிறிலங்கா படையினர் ஒருபோதும், கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவர்கள் அதனைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன. ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலை அடுத்து வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படும் வரையில், இந்த அமைச்சை சிறிலங்கா அதிபரே கவனித்துக் கொள்வார். அதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கு …

Read More »

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தை, இந்திய நிறுவனத்தின் உதவியுடன் …

Read More »

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்றும், அதையடுத்து, திலக் மாரப்பன அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி விற்பனை முறைகேடு தொடர்பாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. …

Read More »

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே …

Read More »

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையின் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், சிறிலங்காவின் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடன் இருந்தனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருந்த போது …

Read More »

சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இரா.சம்பந்தன் “ நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய போருக்கு முக்கிய காரணம். எனவே, …

Read More »

போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் …

Read More »

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. சிறிலங்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரித்தானிய அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2009 மே மாதம், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011 இல் அவசரகாலச்சட்ட விதிகள் தளர்த்தப்பட்டன. …

Read More »

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். …

Read More »