Wednesday , October 15 2025
Home / Tag Archives: சஹ்ரானின்

Tag Archives: சஹ்ரானின்

சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இந்நிலையில் இந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா ( 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார். ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் …

Read More »

சஹ்ரானின் மனைவி வைத்திய சாலையில் புதிய நாடகம்

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும் போதும் இடை.. இடையே காது கேட்காதது போல் நடிப்பதாக கூறப்படுகிறது. சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி …

Read More »

சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Read More »