Tag: கூட்டு எதிரணி

ரணிலுக்கு எதிரான பிரேரணை – எதிரணி நாளை தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது. எதிர்வரும் 6ஆம் நாளுக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் நாங்கள் ஒன்று […]

மஹிந்த அணியின் அரச எதிர்ப்புத் தினமன்று தேசிய அரசு பிளவடையும் சாத்தியம்!

தேசிய அரசிலிருந்து விலகி  நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு […]

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார். அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான […]

யோஷிதவின் கோரிக்கை மனு ஒத்திவைப்பு

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று விளக்கமளிப்பதற்கு காலம் […]

பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசவில்லை: பிரதமர்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது […]

ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு கூட்டு எதிரணி நன்றி

கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு அந்த கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மே தின கூட்டம் தொடர்பில் இன்று கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டார். கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி இருந்ததாகவும் குறிப்பாக பொலிஸார் எந்த தயக்கமும் […]

தனிநாட்டுக் கோரிக்கை-கெஹெலிய ரம்புக்வெல

தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல

தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல தனிநாட்டுக்கான கோரிக்கையைப் பலப்படுத்தவே அரசமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய அரசமைப்புக் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது வெற்றியிலோ, தோல்வியிலோ முடிவடைந்தாலும் அது கூட்டமைப்புக்குச் சாதகமாகவே அமையும் எனவும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த […]