கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் […]
Tag: கண்டி
வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும்!
கண்டியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குரிய நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். வன்முறைச் சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, கண்டியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் […]
கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில்
கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில், கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க […]
கண்டியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இராணுவ தளபதி
கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ […]
கண்டி கலவரத்திற்கு யார் பொறுப்பு கூறுவது: அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுட்டதையடுத்து நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக சிங்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தற்போது தீவிரமடைந்துள்ளது பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன்இ சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் ஏராளமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் […]
தொடர்ந்து கண்டி நிர்வாகப் பிரிவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : இராணுவப் பேச்சாளர்
கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் […]
கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!
கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை […]
நாடு முழுவது 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் பிரகடனம் : ஜனாதிபதி உத்தரவு
கண்டி, திகன – தெல்தெனி பிரதேசத்தில் ஏற்படடுள்ள பதற்றமான நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடு முழுவது அவசகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.
கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் தொடர்கிறது பதற்றம்
கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், […]
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ; பின்புலத்தில் சுமணரத்ன தேரர்
கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் தெல்தெனியவுக்குச் சென்றதை அடுத்தே அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதேவேளை, திகண, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த […]




