Tag: ஐக்கிய தேசியக் கட்சி

ரணிலின் இடத்திற்கு பொன்சேகாவை நியமிப்பதில் ஐ.தே.க மீண்டும் ஆர்வம்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகாவை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆர்வம் காட்டிவருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாகவே யோசனையை முன்வைத்திருந்தது. எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். ஆனால்இ தற்போது மீண்டும் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி […]

ரணிலுக்கு எதிரான பிரேரணை ; ஐ.தே.க. முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே, “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு வழங்கும். இந்தப் பிரேரணைவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முன்னதாகஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் […]

ஐ.தே.கவின் 71ஆவது மாநாட்டில் திஸ்ஸவுக்கு கதவுகள் திறபடுமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராகிய தான் அக்கட்சியின் ஊடாகவே மீள் அரசியல் பிரவேசத்தை விரும்புகிறார் என்றும், தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 36 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார். […]

ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை […]

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார 

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக  இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா […]

மூவரடங்கிய குழுவின் இறுதி முடிவு இன்று! – கூடுகிறது ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில்,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் […]

தாய்வீட்டுக்குள் நுழையத் தயாராகின்றார் திஸ்ஸ!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது […]

தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வெற்றிகளை பெற்ற போதிலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் இருப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு […]

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த […]

தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். […]