Friday , November 22 2024
Home / Tag Archives: எம். ஏ. சுமந்திரன் (page 2)

Tag Archives: எம். ஏ. சுமந்திரன்

யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து 

“யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் …

Read More »

சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: சுமந்திரன்

”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இளைஞனின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த …

Read More »

விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகிறார் : சுமந்திரன் குற்றச்சாட்டு

வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “முதலமைச்சர் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக முதலமைச்சர் சி.வி.க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் …

Read More »

ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு திருப்புமுனையில் சென்றுகொண்டிருக்கின்றது: சுமந்திரன்

தற்போதைய ஆட்சியில் சாதகமான பல முன்னேற்றங்கள் நடைபெற்று, ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ‘ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றியபோது- ”எல்லோரும் எங்களைக் …

Read More »

அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்

இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என இராணுவத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களது காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! - அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் …

Read More »

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம்

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம்

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் …

Read More »

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார்

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் - மு.தம்பிராசா

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்தமை அவர் செய்த தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற …

Read More »

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன்

சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கிஇ ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே …

Read More »

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது

சுமந்திரனை கொலை

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

Read More »