18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் …
Read More »இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா?
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம். சமீபத்தில்தான் தினகரன் தனது …
Read More »சொத்துக்குவிப்பு வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி …
Read More »பேராறிவாளன் திடீர் விடுதலை ?
அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக …
Read More »வளர்மதிக்கு பெரியார் விருது
தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதன்படி பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை …
Read More »தமிழக அரசு காலண்டரில் மோடி
தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடப்படுவது வழக்கம். இந்த காலண்டரில் முதல்வரின் படம் இடபெறும். மேலும் தமிழகத்தின் முக்கியமான சில இடங்களும் இடம்பெறும். தமிழக அரசு சார்பாக அச்சிடப்பட்ட இந்த காலண்டர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். …
Read More »முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெரிய பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பெரியபாண்டியனின் உடலுக்கு …
Read More »ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த …
Read More »முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி
விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Read More »அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …
Read More »