சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, …
Read More »இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். …
Read More »இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்
இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன …
Read More »இலங்கை பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டது. அதில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், விவசாய ஒத்துழைப்புக்கள், …
Read More »செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.
எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் …
Read More »ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!
பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு …
Read More »மஹிந்தவுக்கு உதவிய பாதாளக் குழுக்களின் விவரங்கள் என்னிடம்! – விரைவில் வெளியிடுவேன் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மிரட்டல்
மஹிந்த அணியினர் அதிகம் துள்ளினால் அவர்களுக்கு உதவிய மற்றும் காடைத்தனத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுவினரின் பெயர்ப்பட்டியலை வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்ற பிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். மீதொட்டமுல்ல குப்பைமேடு மற்றும் சைட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் …
Read More »காணாமல்போன படையினர் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டுமாம்! – மஹிந்த அணியின் கோரிக்கை இது .
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அலுவலகம் அமைக்கப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மஹிந்த அணி கூறியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாம் இன்று யுத்தத்தையும், யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷவையும் மறந்துவிட்டே பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இவ்வளவு தூரமேனும் பயணிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குக் …
Read More »புதிய அரசமைப்புத் திட்டத்துக்கு எதிராக சு.க. உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி!
உத்தேச அரசமைப்புத் திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டால் தாங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் எனவும், அத்தகைய காலகட்டத்தில் இவ்விடயத்தில் தாங்கள் பொது எதிரணியான மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசாரார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் கடந்த அரசமைப்புக் குழுக் கூட்டத்தின்போது சிங்களத்தில் ‘ஏகிய’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தையை ஆங்கிலத்தில் …
Read More »புத்த நெறியை மறந்த இரத்த வெறியர்கள் சிங்களர்கள் .
இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது என்றார்.ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் வந்தால் தங்களுக்கு பாதகமாக அமையும் என …
Read More »