தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு தென் கொரியாவிலிருந்து இலங்கைவரும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று அதிகாலை 3.56 மணியளவில், தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்திலிருந்து வருகைதந்த கே.ஈ. 473 என்ற விமானத்தின் மூலம் 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்திருந்தனர். இவ்வாறு நாட்டிற்கு வந்தவர்களில் 137 பேர் இலங்கையர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. …
Read More »