கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. …
Read More »போராட்டங்களுக்கு தீர்வாக மே தினம் அமையவேண்டும்: சம்பந்தன்
”தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும், தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த …
Read More »வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்கள் – இரா. சம்பந்தன் அறிவிப்பு
வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் விசேட கூட்டங்கள் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கடசித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தற்போதைய நிலையில் நடத்த …
Read More »வடக்கு காணி விடுவிப்பு: அடுத்தவாரம் மாவட்ட செயலகங்களில் கூட்டங்கள்
வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும், மாவட்ட செயலகங்களில் இந்த வார இறுதியில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. வடக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் கையளிப்பது தொடர்பாக, கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 அளவில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேவர்தன மற்றும் அமைச்சின் …
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி மைத்திரி
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை …
Read More »ஐ.நா. தீர்மான விவாதத்தில் பங்கேற்க ஆவணங்கள் சகிதம் சபைக்கு வந்தார் சம்பந்தன்!
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த ஐ.நா. தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சதிகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவைக்கு வந்திருந்தார். எனினும், விவாதம் நடைபெறாது தடைப்பட்டதால் அவர் மிகுந்த கவலையடைந்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. …
Read More »சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு …
Read More »புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இளைஞர்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடும் சம்பந்தன் இதற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் …
Read More »நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு புதிய அரசமைப்பில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சம்பந்தன்
புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் …
Read More »நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன்
நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன் நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இச் செயன்முறைகளின் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தியிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் பெண்களே என சுட்டிக்காட்டியுள்ள …
Read More »