Monday , December 23 2024
Home / Tag Archives: இரா. சம்பந்தன் (page 4)

Tag Archives: இரா. சம்பந்தன்

அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் பேசவுள்ளேன்! – சம்பந்தன் தெரிவிப்பு

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன்

இலங்கைக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விவியன் பாலகிருஷ்ணன் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புவந்த அவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவர் சந்திக்கவுள்ளார். இந்தச்  சந்திப்பையடுத்து இவ்விரு அமைச்சர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர். அதன்பின்னர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

Read More »

‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு 

“காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் – சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் …

Read More »

அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம்: சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக …

Read More »

விரைவில் விக்கியுடன் பேசிச் சுமுகமான தீர்வு! – வடக்கு மாகாண சபை விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன்

“வடக்கு மாகாண சபை விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரை எப்போது சந்தித்துப் பேசுவது என்று இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  எப்போது நேரடிச் சந்திப்பு நடைபெறும் …

Read More »

வன்முறையற்ற சூழல் உருவாகுமானால் தப்பிச்சென்ற தமிழர்கள் நாடு திரும்புவர்! : சம்பந்தன்

“அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விரும்பம்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் …

Read More »

கிழக்கு மண்ணில் தமிழர் ஆட்சி உதயமாக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்! – கருணா அம்மான் அறிவிப்பு

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றது” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் …

Read More »

ஆலோசனை கூறலாம்; உத்தரவாதம் தர முடியாது – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் பதில்

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத …

Read More »

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார். இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு …

Read More »

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேசியே முடிவு என்கிறார் சம்பந்தன்!

“வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் …

Read More »

போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு

போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. எனவே, அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக்கூடாது.” – இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை …

Read More »