Wednesday , August 27 2025
Home / ஆரோக்கிய குறிப்புகள் / 7 நாளில் தொப்பையை குறைக்க!

7 நாளில் தொப்பையை குறைக்க!

தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான வழிகளை முயற்சித்திருப்பார்கள், ஆனால் தொப்பை குறைவது என்பதோ சந்தேகம் தான்.

அந்த வகையில் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்.

நிறைய தண்ணீர் பருகவும்

தட்டையான வயிற்றை பெற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

தண்ணீர் அதிகளவு பருகுவது உடலுக்கு நன்மை தரும், உடலிலுள்ள நீர்ச்சத்து தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும், வெறும் தண்ணீர் இல்லாமல் எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய்களை நறுக்கி போட்டும் குடிக்கலாம்.

கிரீன் டீ பருகுங்கள்

தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்த வேண்டும், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் தொப்பையை குறைத்து உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.

நார்ச்சத்தை குறைத்துக் கொள்வது

நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது, அதற்காக அறவே தவிர்க்க கூடாது.

அதிகம் சாப்பிடாமல் பெட்டாசியம் சத்து அதிகமுள்ள வாழைப்பழம், பப்பாளி, மாம்பழத்தை சாப்பிடுவது மெட்டபாலிசத்தின் அளவை சரிசெய்கிறது.

ஏரோபிக் உடற்பயிற்சி

மற்ற உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில், வயிற்று கொழுப்பை கரைப்பதில் ஏரோபிக் முக்கிய பங்காற்றுகிறது, வாரத்திற்கு ஒருமுறை குறைந்தது 150 நிமிடங்கள் இதை செய்தால் 67 சதவிகித வயிற்றுக் கொழுப்பு கரைந்துவிடும்.

சர்க்கரையை தவிர்க்கவும்

சர்க்கரை அதிகம் நிறைந்த இனிப்பு பொருட்களை தவிர்க்கவும், இது வயிற்றுப் பகுதியில் தேவையில்லாத கொழுப்புகளை தங்க செய்கிறது, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

Check Also

புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று பராம்பரிய அரிசி வகைகளை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு …