Wednesday , October 15 2025
Home / ராசிபலன் / நவம்பர் மாத பலன்கள் 2017

நவம்பர் மாத பலன்கள் 2017

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! குருபகவான் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும்.

ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும்.

3-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும்.

கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், புது நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுதல் மதிப்பெண் பெற்றால் நல்லது. கூடுதலாக நேரம் ஒதுக்கி படித்தால் நல்லது என்றெல்லாம் கவலைப்படுவீர்கள். அவர்களின் உடல் நலமும் பாதிக்கும். உங்களது ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க வலுப்பெற்று அமர்ந்திருப்பதால் பூமி, வீடு வாங்குவது சாதகமாக அமையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள்.

நல்ல நண்பர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு.

உங்களை சிலர் ஓரம் கட்ட நினைப்பார்கள். உங்களின் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் எல்லாவற்றையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியால் முன்னேறும் மாதமிது

ரிஷபம்:உழைப்பால் உயரும் உத்தமர்களே! 3-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் சென்று மறைவதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரக்கூடும்.

இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீடு பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வாகனம் பழுதாகும். கழிவு நீர், ஒயரிங் பிரச்னைகள் வந்துப் போகும். அருந்துக் கிடக்கும் மின்கம்பியை மிதிக்க வேண்டாம். எலக்ட்ரிக் ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கிறது. தலை வலி, சைனஸ் தொந்தரவுகள் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம்.

புதன் சாதகமாவதால் உறவினர், நண்பர்களுடனான பகைமை நீங்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 3-ம் வீட்டிலேயே ராகுபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்னைகள், சிக்கல்கள், உடல் நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

செவ்வாய் 5-ல் இந்த மாதம் முழுக்க நீடிப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தங்கள் வரும். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரக்கூடும். சகட குரு நடப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது.

கன்னிப் பெண்களே! பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வேஸ்-புக், வாட்ஸ்-அப்பில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பெரியளவில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் நயமாகப் பேசுங்கள்.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். பொங்கி எழாமல் பொறுமை காக்க வேண்டிய மாதமிது

மிதுனம்:பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! இராஜ கிரகங்களான சனியும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை விற்று சிலர் டவுன், நகர எல்லையில் சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நிச்சயமாகும்.

செவ்வாய் இந்த மாதம் முழுக்க கேந்திரபலம் பெற்று 4-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். புதன் 6-ல் சென்று மறைந்திருப்பதால் கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு, காய்ச்சல் வரக்கூடும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.

சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் நீண்ட நாட்களாக வீடு மாற நினைத்தவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.

ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப புது வேலை அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது முதலீடு செய்வீர்கள்.

சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், சமயோஜித புத்தியாலும் சாதித்துக் காட்டு

கடகம்: சரிநிகர் சமத்துவத்திற்காக போராடுபவர்களே! இந்த மாதம் முழுக்க பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

பணப்புழக்கம் கணிசமாக உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆனால் சனி 5-ல் நிற்பதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கும். பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிய வேண்டி வரும்.

சுக்ரனும், புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள்.

வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ராசிக்குள் ராகு நிற்பதாலும், 7-ல் கேது தொடர்வதாலும் டென்ஷன், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

எனவே பச்சை கீரை, காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இடைத்தரகர்களை நம்பி பணத்தை தந்து விட்டு ஏமாற வேண்டாம். 4-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் கை, கால் வலிக்கும். சோர்வு, அலுப்பு வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் கால, நேரம் பார்க்காமல் உழைத்தாலும் உயரதிகாரிகள் குறைக் கூறத்தான் செய்வார்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் சமாளித்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

சிம்மம்: அண்டமே சிதறினாலும் அஞ்சாதவர்களே! கேது 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிட்டும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதனும், சுக்ரனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். தவணை முறையில் பணம் செலுத்தி சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் தோலில் நமைச்சல், அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வழக்கில் அலட்சியம் வேண்டாம். தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அவரிடம் எதிர்விவாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் பிரபல யோகாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க 2-ம் இடத்திலேயே தொடர்வதால் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பல் வலி, பார்வைக் கோளாறு வரக்கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

குரு 3-ல் தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். அனுபவ அறிவாலும், ஆன்மிக பலத்தாலும் முன்னேறும் மாதமிது.

கன்னி: நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! சனிபகவான் 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். லாப வீட்டிலேயே ராகு தொடர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.

உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். நல்ல நிறுவனத்தில் உத்யோகம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதனும், பாக்யாதிபதி சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உற்சாகமடைவீர்கள்.

இங்கிதமாக, இதமாகப் பேசி பல முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

சிலர் புது வீடு மாறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பிதுர்வழி சொத்துகள் வந்துச் சேரும். குருபகவான் 2-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால் இந்த மாதம் முழுக்க செவ்வாய் ராசிக்குள்ளேயே நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், இரத்த சோகை, முன்கோபம், வீண் சச்சரவுகளெல்லாம் வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

சொத்து வாங்குவதாக இருந்தால் தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளே வியக்கும்படி சில முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! உங்கள் புகழ் கூடும். உங்களின் கலைத்திறன் வளரும்.

செவ்வாயால் சின்ன சின்ன ஏமாற்றங்கள், தடங்கல்கள் இருந்தாலும், ராஜ கிரகங்களின் ஆதரவால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.

துலாம்: நாடி வருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். உறவினர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வாகனம் பழுதாகி சரியாகும்.

என்றாலும் சூரியன் சாதகமாக இல்லாததால் உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் நிலை பாதிக்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும்.

ஜென்ம குரு நடைபெறுவதால் அஜீரணப் பிரச்னை, வயிற்று உபாதை, நீர் சுருக்கு, கணுக்கால் வலி வந்துப் போகும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் தவறான மருந்து, மாத்திரைகளால் கூட பாதிப்புகள் வரக்கூடும்.

வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ராசிக்கு 12-ல் செவ்வாய் நிற்பதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் இருக்கும். அவ்வப்போது தூக்கம் கெடும். உடன்பிறந்தவர்களால் மனஉளைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.

பாதச் சனி தொடர்வதுடன், சர்ப்ப கிரகங்களும் சாதகமாக இல்லாததால் வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பணம், நகை மற்றும் கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய மாதமிது.

விருச்சிகம்: மிதமாக யோசித்து வேகமாக செயல்படுபவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே வலுவாக நிற்பதால் செயற்கரிய காரியங்களையும் முடித்துக் காட்டி எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.

சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். பணப்புழக்கம் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். ஆனால் ராசிக்குள்ளேயே சனி நிற்பதால் அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.

யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. சப்தமாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழியில் மரியாதைக் கூடும். புது வேலைக் கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தூக்கம் குறையும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திட்டமிட்டபடி பயணங்கள் அமையும்.

பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்துப் பேசுவார்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். குருபகவான் 12-ல் மறைந்திருப்பதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. ஆன்மிகத் ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும்.

பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் மாறுபட்ட படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். விவேகமான முடிவுகளால் பழைய பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும் மாதமிது.

தனுசு: தன்கையே தனக்குதவி என்று வாழ்பவர்களே! இந்த மாதம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன், புதன், குரு போன்ற முக்கிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாயும் இந்த மாதம் முழுக்க 10-ம் இடத்திலேயே தொடர்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் உடல் நிலை சீராகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சில உதவிகள் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒரு பயம் இருக்கும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே சென்று வருவது நல்லது.

காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினரே! புகழடைவீர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பெருமைப்படும்படி நடந்துக் கொள்வீர்கள். செல்லு

மகரம்: வசதி வந்த போதும் வறுமையை மறக்காதவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் யோகாதிபதி சுக்ரன் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு இருந்ததே! அந்த பற்றாக்குறை குறைந்து பணப்புழக்கமும் அதிகரிக்கும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரே ஓவனை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கோவில் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சூரியன், புதன் சாதகமாக இருப்பதால் புது வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும்.

அவருடன் இருந்த மோதல்கள் விலகும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிட்டும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. செவ்வாயும் சாதகமாக இருப்பதால் பழைய மனையை விற்று சிலர் புதிதாக வீட்டு மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.

குரு 10-ம் வீட்டிலும், ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள்.

சின்ன சின்ன அவமரியாதை சம்பவங்கள் நிகழக்கூடும். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்க

கும்பம்: உதவும் குணத்தால் உயர்ந்தவர்களே! ராகு 6-ம் வீட்டிலும், குருபகவான் 9-ம் இடத்திலும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

பழைய வீட்டை சிலர் இடித்துக் கட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆரோக்யம், அழகு, இளமைக் கூடும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

யோகாதிபதியான சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழிப் மொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு அரசு அனுமதி கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.

இந்த மாதம் முழுக்க செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் முன்கோபம், வீண் டென்ஷன், காரியத் தடைகளெல்லாம் வரக்கூடும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக்கூடும். இரத்த அழுத்தமும் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும்.

எனவே கொஞ்சம் சுற்று வட்டாரத்தைப் புரிந்துக் கொண்டு இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது, பழகுவது நல்லது. தூக்கமில்லாமல் போகும். பழைய பிரச்னைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் கனியும்.

பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். மனயிறுக்கத்தையும், செலவுகளையும் தந்தாலும் வளைந்துக் கொடுத்துப் போவ

மீனம்: ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! சுக்ரன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.

பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். வாகனப் பழுது சரியாகும். கோபம் குறையும். புது வேலைக் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த ஒரு தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். 16ந் தேதி வரை 6-க்குரிய சூரியன் 8-ல் அமர்ந்ததால் மதிப்புக் கூடும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பலவீனத்தால் நெஞ்சு வலிக்கும் பயந்துவிடாதீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும். உங்களுக்கு உதவ வேண்டிய உங்கள் ராசிநாதன் குரு 8-ம் இடத்தில் மறைந்துக் கிடப்பதால் எந்த வேலையாக இருந்தாலும் இழுபறியாகி முடியும். நீங்கள் எது பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

நீங்களும் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுவீர்கள். பிரச்னைகள் வந்துவிடுமோ என்ற பயம் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். ஒரே நாளிலேயே வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. லாப வீட்டில் கேது தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். செவ்வாய் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். உயர்கல்வியை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உத்யோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நாலும் தெரிந்த நல்

Loading…

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …