Saturday , August 23 2025
Home / தொழில்நுட்பம் / ஜியோவின் தீபாவளி பரிசு

ஜியோவின் தீபாவளி பரிசு

ஜியோ பைபர் சேவை மூலம் 100ஜிபி அதிவேக டேட்டா வெறும் 500 ரூபாய்க்கு தீபாவளி முதல் வழங்கப்படவுள்ளது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஜியோ பைபர் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தில் ஜியோ பைபர் சேவை தீபாவளி முதல் 100 நகரங்களில் தொடங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது.

இத்திட்டம் முதலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், ஜெய்ப்பூர், சூரத், வடோதரா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபைபரின் மூலம் 100Mbps வேகத்தில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஜியோ பைபர் 100ஜிபி டேட்டா வழங்கப்படும். 100 ஜிபி முடிவடைந்த பின் வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறையும் என கூறப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Technology News