பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். பல்வேறு நாடுகள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவும் தனது ஒப்புதலை கடந்தாண்டு அளித்தது. இந்த நிலையில், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை …
Read More »சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்திய வர்த்தக கப்பல் 11 ஊழியர்களுடன் கடத்தல்
சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்தியா சேர்ந்த வர்த்தக கப்பல் 11 ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை ஏப்ரல் ஒன்றாம் தேதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் அப்திரிசாக் முகமது திரிர் பேசுகையில், “இந்திய …
Read More »அமெரிக்காவின் செனட் சபை தேர்தலில் போட்டியிடும் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாத்துரை
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் சிவா அய்யாத்துரை சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு …
Read More »ஈராக் அரசுப் படையினரின் வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி பலி
ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா வீரர்கள் …
Read More »ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 …
Read More »இங்கிலாந்து பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை கடித்து குதறி கொன்ற நாய்
இங்கிலாந்து நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ்(41) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் உரிமையாளருக்கு நாய் உதவியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிபிசி செய்தி …
Read More »அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி
குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் ‘எச்- 1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்ய இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அடுத்த நிதி ஆண்டுக்குரிய ‘எச்-1பி விசா’வுக்கு வரும் 3-ந் தேதி …
Read More »பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் டாக்காவில் சுட்டுக் கொலை
வங்கதேசம் நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. டாக்கா …
Read More »மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைத்து செயற்கை நுண்ணறிவு புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்
மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் …
Read More »ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளை போன நாணயம் கனடா அரசால் …
Read More »