வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர்களை விலையாக தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …
Read More »அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம் – வடகொரியா அறிவிப்பு
ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. …
Read More »மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல்
மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடான மசிடோனியாவில் அல்பேனியன் நாடு உருவானத்தில் இருந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் நிகோலா குருவ்ர்கியின் வி.எம்.ஆர்.ஓ. கட்சி, ஆட்சி முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோசியல் ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன்ஷயீவ் அல்பேனியா ஆதரவு பெற்ற கட்சியுடன் இணைந்து புதிய அரசு அமைக்க முயன்று …
Read More »சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு – ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்
சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனாவும் ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என ஐரோப்பிய விண்வெளி கழகம் கருதுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. …
Read More »சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் …
Read More »தென் கொரியாவில் அமெரிக்கா கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு
அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை நடத்த போவதாக அறிவித்துள்ளார். அவருடைய மிரட்டல் காரணமாக …
Read More »வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா: ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுகிறது
வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுவதாக வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார். வங்காள தேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சவுதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் மசூதி கட்டுவதற்கு சவுதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் …
Read More »அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவில் மரண தண்டனை விஷ ஊசி போட்டு நிறைவேற்றப்படுகிறது. அத்தகைய தண்டனை ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு மாகாணமான ஆர்கன்சாசில் ஒரே நாள் இரவில் 2 …
Read More »சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி
சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர். ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் குர்து …
Read More »அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வருகை: வடகொரியா ராணுவ பயிற்சியால் போர் பதட்டம்
அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது …
Read More »