Friday , November 22 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 59)

உலக செய்திகள்

ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்துகொள்ளாது!

பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது விளக்கம் அளிக்கும் விடயத்தில், ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் பிரித்தானிய பிரதமர் மே ஆகியோருக்கு இடையில் பிரெக்சிற் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கவில்லை என, ஜேர்மனிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்தவாறு டோரிக்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தால் வெளியிடப்படும் பிரெக்சிற் விதிமுறைகளை பிரித்தானியா …

Read More »

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் நடத்தியது. இருந்தும் எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் …

Read More »

தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்

தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் …

Read More »

துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

ராணுவ புரட்சிக்கு உதவியதாக கூறி துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ புரட்சி நடந்தது. அதை அதிபர் ரீசெப் தய்யிப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பதுல்லா குலென் தூண்டுதலின் பேரில் புரட்சி நடந்ததாக தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மீது அதிபர் எர்டோகன் நடவடிக்கை மேற்கொண்டு …

Read More »

கிம் ஜொங் உன் புத்திசாலியானவர்: ட்ரம்ப்

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஒரு புத்திசாலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், கிம் ஜொங் உன் மிக இளவயதிலேயே பாரிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளதாகவும் ஏனைய தலைவர்களுடன் சரிசமமாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், …

Read More »

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது தவறி விழுந்து மலையேறும் வீரர் பலி

நேபாளத்தில் நேற்று காலை நப்ட்ஸ் பகுதி வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் தவறிவிழுந்து பலியானார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் யுயெலி ஸ்டெக் (40). நேற்று காலை இவர் நேபாளத்தில் உள்ள நப்ட்ஸ் பகுதி வழியாக இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அப்போது அவரது கை தவறிவிட்டது. இதனால் அவர் மிக ஆழமான பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவர் அதே …

Read More »

விரைவில் அணு குண்டு சோதனை – அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து …

Read More »

மாசிடோனியா பாராளுமன்றத்துக்குள் நுழைந்து சூறை – எம்.பி.க்கள் மீது தாக்குதல்

மாசிடோனியா பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி ஆதரவுடன் அல்பேனிய கட்சியை சேர்ந்த தலாத் சபெரி வெற்றி பெற்றதில் ஆத்திரம் அடைந்த வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை சூறையாடினர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு (வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ) பின்னடைவு ஏற்பட்டது. அல்பேனிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை உருவானபோது, ஆளும் கட்சி அதை தவிர்த்தது. இதையடுத்து சமூக ஜனநாயக …

Read More »

ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி

ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது. இந்நிலையில், ஏமன் …

Read More »

எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வரும் வடகொரியா இன்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துளளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட …

Read More »