கத்தார் மீதான தடை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிலவும் சமீபத்திய குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் உச்ச தலைவர் அயடோலா அலி கமேனெய் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் உடன் இருந்த தூதரக உறவுகளை சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் திடீரென முறித்தன. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் …
Read More »ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் ஆவேச தாக்குதல் நடத்துவோம் – ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில் மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் அதிரடி தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர். …
Read More »தேர்தல் குளறுபடிகளுக்காக உள்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று அக்கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு …
Read More »இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும்: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும் என பாகிஸ்தானுக்கு டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் நடைபெறும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ சேவைகள் கமிட்டியின் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் ராணுவ உளவுத்துறை இயக்குனர் லெப்டினெட் ஜெனரல் வின்சென்ட் ஸ்டீவர்ட் பேசினார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில், வைத்துள்ளது. எனவே, அதன் …
Read More »மான்செஸ்டர் தாக்குதலில் 7 பேர் கைது: தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் …
Read More »தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்: ஆத்திரமூட்டல் செயல் என சீனா கருத்து
தென் சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என சீனா கருத்து தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த …
Read More »வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு
வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு நடத்தியது. எந்திர துப்பாக்கியால் 90 ரவுண்டு சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 அணுகுண்டு சோதனைகள் மற்றும் பல ஏவுகணைகள் சோதனைகளும் நடத்தி உள்ளன. இதற்கு அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து …
Read More »வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்
ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, …
Read More »லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு – 19 பேர் பலி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று இரவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10.33 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் …
Read More »மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த …
Read More »