Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 52)

உலக செய்திகள்

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியன் விதித்தது

நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரத்து 220 கோடியை (240 கோடி யூரோ) அபராதமாக ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் உலகின் மிகப் பிரபலமான தேடு பொறியாக உள்ளது. அது நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐரோப்பிய யூனியன் அந்நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ (ரூ.17 ஆயிரம் கோடி) அபராதமாக விதித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்கரெட் வெஸ்டேஜர் …

Read More »

மொசூல் நகரில் மிக பழமையான மசூதியை இடித்து தரைமட்டமாக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம்

ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் ராக்கா நகரம் உள்ளிட்ட பகு திகளையும், ஈராக்கில் மொசூல் நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை ராணுவம் ஏற்கனவே மீட்டு விட்டது. கடைசியாக …

Read More »

சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீன பாகிஸ்தான் பொருளாதார திட்டம் காரணமாக பாகிஸ்தானில் வாழும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இவர்களது பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அரசு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை சீனர்கள் வாழும் பகுதியில் குவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. …

Read More »

பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி …

Read More »

டிரம்பை ஒருபோதும் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

‘டிரம்பை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவியும், மாடல் அழகியுமான கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49). இவர் முன்னாள் மாடல் அழகி. பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார். இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் …

Read More »

கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்

வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு வடகொரியாவை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு …

Read More »

கடந்த இரண்டாண்டுகளாக இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்துவிட்டது: ஸ்விஸ் வங்கிகள்

கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் …

Read More »

லண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: மசூதி அருகே வேன் மோதி ஒருவர் பலி

லண்டன் நகரில் மசூதிகளில் தொழுகை முடிந்து திரும்பி வந்தவர்கள் மீது வேனை ஏற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோடு உள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால் இங்குள்ள மசூதிகளில் நேற்று நள்ளிரவு வேளையில் ’தராவீஹ்’ தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் தொழுகை முடிந்து வீடு திரும்பி …

Read More »

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் இங்கு இஸ்லாமியர்கள் இடுகாடு மற்றும் நினைவு கற்கள். …

Read More »

சிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் …

Read More »