Sunday , November 24 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 51)

உலக செய்திகள்

ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா: போர்க்கலை நிபுணர்கள் கணிப்பு

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா இருப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த போர்க்கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 …

Read More »

விண்ணில் செலுத்திய சீன ராக்கெட் வெடித்து சிதறி விபத்து

ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் கொண்ட சீன ராக்கெட் விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதிக எடை கொண்ட அதி நவீன ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகளை சீனா அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று காலை ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் …

Read More »

சிக்கிம் மாநில இந்திய பகுதியை சீனாவுடன் சேர்த்து வரைபடம்: மத்திய அரசு கடும் அதிர்ச்சி

சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளின் எல்லை பகுதி ஒன்றிணையும் இடம் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. டோகாலா என்று அழைக்கப்படும் இந்த இடம் சிக்கிம் மாநிலத்தின் உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு …

Read More »

சீன ஆக்கிரமிப்பு கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்

தென்சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீன கடற்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், பராசெல் தீவு கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த தீவு தங்களுக்கு சொந்தமென தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் கூறி வருகின்றன. தென்சீன கடல் பகுதி முக்கிய …

Read More »

தூதரக உறவு தடையை நீக்க கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு: சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

தூதரக உறவுக்கான தடையை நீக்க கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் 48 மணி நேரம் ‘கெடு’ விதித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5 -ந் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், தங்களது எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி இந்த தடை விதிக்கப்பட்டது. …

Read More »

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் …

Read More »

பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் …

Read More »

தடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற அமெரிக்கா புதிய நிபந்தனை

சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் அரசு ‘விசா’ தடை விதித்தது. அதே போன்று அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இதற்கு அமெரிக்க கோர்ட்டுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்துள்ளது. அதன்படி தடை …

Read More »

பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை வேகமாக மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் …

Read More »

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியை காப்பாற்றிய அதிகாரி

அமெரிக்க வெள்ளை மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காப்பற்றினார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ்கார்டனில் கூட்டாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகை குறிப்புகள் எடுத்து …

Read More »