ஈராக் நாட்டின் மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களது மனைவி, குழந்தைகளை மனித கேடயமாக்கி இராணுவத்துடன் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்தனர். கடைசியாக அவர்கள் வசம் மொசூல் நகரம் இருந்தது. அதை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் போர் தொடுத்தன. 9 மாத தீவிர …
Read More »தென்னாப்பிரிக்கா: காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் புகுந்த 4 சிங்கங்கள்
தென்னாப்பிரிக்காவில் காட்டில் இருந்து தப்பிய 4 சிங்கங்கள் ஊருக்குள் புகுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள குருகர் என்ற இடத்தில் 12 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காடு உள்ளது. இங்கு சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் அங்கு வசிக்கின்றன. இவற்றில் 4 ஆண் சிங்கங்கள் காட்டில் இருந்து தப்பி ஊர் பகுதிக்குள் புகுந்து விட்டன. …
Read More »மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
”உண்மையே கடவுள்’ என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. தனது வாழ்நாளில் இந்த ஓவியத்துக்குதான் அவர் வெகுநேரம் அமர்ந்து ’போஸ்’ கொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட …
Read More »இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை மணந்த 15 வயது சிறுவன்
இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை 15 வயது சிறுவன் மணந்த சம்பவம் அப்பகுதியில் சமீப கால பரபரப்பு பேச்சாக உள்ளது. 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டியுடன் சிறுவன் செலாமெட் ரியாடி. ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15). சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது …
Read More »2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு …
Read More »தீவிரவாதிகள் என தவறாக நினைத்து நைஜரில் ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலி
நைஜீரியா எல்லையில் உள்ள அபாடம் கிராமத்தில ரோந்து சுற்றிய ராணுவ வீரர்கள் 14 பேரை சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் தான் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்தது. நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது எல்லை தாண்டிச் சென்ற அண்டை நாடான நைஜரில் தாக்குதல்கள் நடத்துகின்றன. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜர் ராணுவம் தீவிரமாக உள்ளது. ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி …
Read More »கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது: கத்தார் வெளியுறவுத்துறை தகவல்
கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட …
Read More »வடகொரியாவின் மிரட்டலை முறியடிக்க தயாராக இருக்கிறோம்: அமெரிக்க ராணுவ தலைமையகம்
புதிதாக சோதிக்கப்பட்ட ஏவுகணை அமெரிக்காவுக்கு சுதந்திர தின பரிசு என வடகொரிய அதிபர் கூறியிருந்த நிலையில், எந்த வகையான மிரட்டலையும் முறியடிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. வடக்கு பியாங்கன் …
Read More »அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை
சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது. …
Read More »அடங்காத வடகொரியா: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை
ஜி-20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை …
Read More »